/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நம்ம ஊரு கதை போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு பாராட்டு விழா
/
நம்ம ஊரு கதை போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு பாராட்டு விழா
நம்ம ஊரு கதை போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு பாராட்டு விழா
நம்ம ஊரு கதை போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு பாராட்டு விழா
ADDED : ஏப் 18, 2025 04:38 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் நம்ம ஊரு கதை போட்டியில் வட்டார அளவில் முதலிடம் பிடித்த பள்ளி குழந்தைகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் பானு தலைமை தாங்கினார்.
திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பயிற்றுனர் இருதயராஜ் வரவேற்றார்.
விழுப்புரம் டி.இ.ஓ., ஆனந்த சக்திவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நம்ம ஊரு கதை போட்டியில் வட்டார அளவில் முதலிடம் பிடித்த பள்ளி குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
ஆசிரியர் பயிற்றுனர்கள் சிலம்பரசன், மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் வினிதா, பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.