நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை தமிழ்ச்சங்கத் தலைவருக்கு பாராட்டு விழா நடந்தது.
அவலுார்பேட்டையைச் சேர்ந்தவர் புருேஷாத்தமன், 82; தமிழ்ச்சங்கத் தலைவர். தமிழாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவரது தமிழ் ஆர்வம் மற்றும் பணியை பாராட்டி 20க்கும் மேற்பட்ட விருதுகளை பல்வேறு அமைப்புகள் வழங்கியுள்ளது.
சேலம் மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பில் 23ம் தேதி, நடந்த விழாவில், 100 சாதனையாளர்களின் சரித்திரம் மலர் வெளியிடப்பட்டது, அதில் இவரது சாதனைகளும், குறிப்புகளும் இடம் பெற்றிருந்தது.
இதை தொடர்ந்து அவலுார்பேட்டையில் தமிழ்ச்சங்கம் சார்பில் புருஷோத்தமனின் தமிழ் சேவையை பாராட்டி விழா நடத்தப்ஹபட்டது.
பொருளாளர் செல்வராஜ், செயலாளர் மகாராஜன், ஆலோசகர் ஏழுமலை, முருகன், அண்ணாமலை, ஜெகதீஷ்குமார், சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

