
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி; அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செஞ்சி அடுத்த கவரை அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், பல்வேறு பாடங்களில் 100 மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது.
இதில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு மாவட்ட ஆதிராவிடர் நல பள்ளிகள் உதவி கல்வி அலுவலர் கலியவரதன் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.
இதில் ஆசிரியர்கள் அரசு, மல்லிகா, ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.