
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: ஒலக்கூர் ஒன்றியத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
திண்டிவனத்தில் அனைத்து நிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த விழாவில், பணி ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் சாந்தி, தனலட்சுமி, மாலா, ஷீலாதேவி, திரேசாமேரி, ரூத்பிரேமா, ஞானஒளி, வளர்மதி, சந்திரசேகர், முனுசாமி, திருமால், காமராஜ், சண்முகம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி ) அருள் தலைமை தாங்கி வாழ்த்தி பேசினார். ஒலக்கூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், கீழ் பசார் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சின்னசாமி முன்னிலை வகித்தனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பணி ஒய்வு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தி பேசினர். விழாவில் ஒய்வு பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

