/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துாய்மைப் பணியாளர்களுக்கு வளவனுாரில் பாராட்டு விழா
/
துாய்மைப் பணியாளர்களுக்கு வளவனுாரில் பாராட்டு விழா
துாய்மைப் பணியாளர்களுக்கு வளவனுாரில் பாராட்டு விழா
துாய்மைப் பணியாளர்களுக்கு வளவனுாரில் பாராட்டு விழா
ADDED : பிப் 05, 2024 04:03 AM

விழுப்புரம் : முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, வளவனுார் பேரூராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜரத்தினம் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா, செயல்அலுவலர் அண்ணாதுரை, துணைச் சேர்மன் அசோக் மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஜீவா வரவேற்றார்.
கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், முன்னாள் பேரூராட்சி தலைவர் சம்பத், முன்னாள் துணைச் சேர்மன் சரபோஜி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, பிரபாகரன், அவைத் தலைவர் வழக்கறிஞர் கண்ணப்பன் வாழ்த்திப் பேசினர்.
விழாவில், துாய்மைப் பணியாளர்களை, லட்சுமணன் எம்.எல்.ஏ., பாராட்டி, சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பேசுகையில், 'மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மக்கள் நலன், தமிழ் வளர்ச்சி, சமுதாய முன்னேற்றத்திற்காக எண்ணற்ற நலத் திட்டங்களை கொண்டு வந்தார். கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டம், தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் உழவர் சந்தைகள், கிராமப்புற வளர்ச்சிக்கென நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.
இப்படி எண்ணற்ற நலத்திட்டங்களை அமல்படுத்தி, வரலாற்று சாதனைகள் நிகழ்த்தியவர் கருணாநிதி. அதே வழியில் முதல்வர் ஸ்டாலின், மக்கள் நலனை குறிக்கோளாக கொண்டு, அயராமல் பாடுபட்டு வருகிறார்' என்றார்.
முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துசாமி, கவுன்சிலர் மணவாளன், தி.மு.க., நிர்வாகி ராமு, வளவனுார் நகர இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

