/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நந்தன் கால்வாய் சீரமைப்பு பணி நன்கொடையாளர்களுக்கு பாராட்டு
/
நந்தன் கால்வாய் சீரமைப்பு பணி நன்கொடையாளர்களுக்கு பாராட்டு
நந்தன் கால்வாய் சீரமைப்பு பணி நன்கொடையாளர்களுக்கு பாராட்டு
நந்தன் கால்வாய் சீரமைப்பு பணி நன்கொடையாளர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 08, 2026 05:44 AM

செஞ்சி: நந்தன் கால்வாய் சீரமைப்பதற்கு நிதி வழங்கியவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.
செஞ்சி வீராசாமி நைனார் திருமண மண்டபத்தில் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடந்த ஆண்டு நடந்த நந்தன் கால்வாய் சீரமைப்பு பணிக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.
சுரேஷ் தலைமை தாங்கினார். ரவிச்சந்திரன் வரவேற்றார். அன்பழகன் வாழ்த்தி பேசினார். புதுச்சேரி சபாநாயகர் செல்வம், மஸ்தான் எம்.எல்.ஏ., முன்னாள் சேர்மன் ரங்கநாதன் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நன்கொடையாளர்களுக்கு கேடயம் வழங்கினார். திட்டம் குறித்து கார்த்திகேயன், திருவண்ணாமலை மாவட்ட நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் தமிழ்செல்வன், விழுப்புரம் செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசினர்.
நந்தன் கால்வாய் சீரமைப்பு பணிக்கு ரூ.1 லட்சம் வழங்கிய கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான், ரூ. 5.25 லட்சம் வழங்கிய சென்னை காயத்திரி டிரஸ்ட், ரூ 2.50 லட்சம் வழங்கிய ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை உள்ளிட்டவர்களை பாராட்டி கேடயம் வழங்கினர்.
இதில் தமிழ்நாடு நீர்நிலை பாதுகாப்பு சங்க நிர்வாகி அறவாழி, செஞ்சி நீர் ஆதார சங்க தலைவர் சக்திராஜன், வர்த்தகர் சங்க தலைவர் செல்வராஜ், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சங்கர், நிர்வாகிகள் வரதராஜன், சேகர், சந்தானம், புஷ்பா சேகர், ஜோலாதாஸ், ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரவி உட்பட் பலர் கலந்து கொண்டனர். கன்னிகா ரமேஷ் நன்றி கூறினார்.

