/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரணி தி.மு.க., வேட்பாளர் தரணிவேந்தன்?
/
ஆரணி தி.மு.க., வேட்பாளர் தரணிவேந்தன்?
ADDED : மார் 19, 2024 10:50 PM
செஞ்சி : ஆரணி லோக்சபா தொகுதியில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டரத்தில் கூறி வருகின்றனர்.
ஆரணி லோக்சபா தொகுதியில் தி.மு.க., களம் இறங்குவது முடிவாகிவிட்டது. இந்த தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
ஆரணி தொகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆரணி, வந்தவாசி, செய்யாறு, போளூர் ஆகிய சட்டசபை தொகுதிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம் சட்டசபை தொகுதிகளும் அடங்கியுள்ளன. இதனால் நான்கு தொகுதிகளைக் கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கே தி.மு.க.,வில் சீட் ஒதுக்க உள்ளனர்.
அதில், கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள தரணிவேந்தனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.

