/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தென்பெண்ணையாற்றில் தொல்பொருட்கள் கண்டெடுப்பு
/
தென்பெண்ணையாற்றில் தொல்பொருட்கள் கண்டெடுப்பு
ADDED : ஜன 04, 2026 06:52 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றில், தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் குழு கள ஆய்வு மேற்கொண்டு, தொல்பொருட்களை கண்டறிந்தனர்.
இம்மானுவேல் கூறியதாவது:
குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றில் கள ஆய்வில், புதிய கற்காலத்தை சேர்ந்த கல் ஆயுதம், சிதைந்த கருப்பு - சிவப்பு பானை ஓடுகளின் மத்தியில், உடைந்த இரும்பு பொருட்கள், 17 செ.மீ., நீளம் கொண்ட இரும்பு ஆயுதம் கிடைத்தன.
இதில், 6.5 செ.மீ., நீளம் கொண்ட கற்கருவியான கை கோடாரி புதிய கற்காலத்தை சேர்ந்தது. ஒரு புறம் கூர்மையாகவும், மறுபுறம் தட்டையாகவும் உள்ளது. 5,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என, தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

