/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
/
மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
ADDED : அக் 02, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு பகுதியில் கோட்டக்குப்பம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்ததில் செங்கல்பட்டு மாவட்டம், வெண்ணாங்குப்பட்டையைச் சேர்ந்த கணேசன் மகன் பிரகாஷ், 36; என்பவர் புதுச்சேரியிலிருந்து 35 மதுபாட்டில் கடத்தி சென்றது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.