ADDED : செப் 04, 2025 02:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கான பணிகள் துவங்கின.
செஞ்சி, ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
பி.டி.ஏ., தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கலையரசி முன்னிலை வகித்தார். ஆசிரியர் செந்தில் பாலா வரவேற்றார்.
பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கார்த்திக், பொன்னம்பலம், சங்கர், சுமித்ரா சங்கர், ஜான் பாஷா, சிவக்குமார், அகல்யா வேலு, ஆசிரியர் ஏழுமலை ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.