/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேகம்
/
அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேகம்
அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேகம்
அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேகம்
ADDED : ஜன 14, 2025 07:16 AM

செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
செஞ்சி பீரங்கி மேடு அபித குஜாம்பாள் சமேத அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது.
அதனையொட்டி அதிகாலையில் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 9.00 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
திருமறை கழக நிர்வாகிகள், அருணாச்சல ஈஸ்வரர் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்டாச்சிபுரம்
கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 108 வகை வாசனை திரவியங்களைக் கொண்டு நடராஜருக்கு அபிேஷகம் நடைபெற்றது.
நேற்று அதிகாலை ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாரதனை, நடராஜருக்கு அபிேஷகம் நடந்தது. பின்னர் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமி நடனமிடும் நிகழ்ச்சியை தொடர்ந்து தீபாராதனை நடந்தது.
கோலியனூர்
ஸ்ரீ வாலீஸ்வரர் கோவிலில் நேற்று காலை மூலவர் வாலீஸ்வரருக்கும், உற்சவர் ஸ்ரீ நடராஜருக்கும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து, மூலவர் வாலீஸ்வரருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து, உற்சவர் நடராஜருக்கும், தாயாருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை 8.00 மணிக்கு வீதிவுலா புறப்பாடு நடந்தது.

