/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேலை வாங்கி தருவதாக மோசடி தலைமறைவு ஆசாமி கைது
/
வேலை வாங்கி தருவதாக மோசடி தலைமறைவு ஆசாமி கைது
ADDED : பிப் 16, 2025 03:40 AM

விழுப்புரம்: ரயில்வே துறையில் வேலை வாங்கி தருதாக கூறி 5 பேரிடம் பணம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவு ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாபுராஜ், 36; இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு சென்னை, பல்லாவரம் சக்திவேல், பெரும்பாக்கம் ஜெயக்குமார், பங்கலாப்பேட்டை சரவணன் ஆகியோர் அறிமுகமாகினர்.
இவர்கள் மூவரும், பாபுராஜிடம் சென்னை, நங்கநல்லுாரைச் சேர்ந்த நண்பர் அரிகுமார்,52; பலருக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தந்துள்ளார். அவரிடம் பேசி ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.
அதனை நம்பிய பாபுராஜ் மற்றும் அவருக்கு தெரிந்த ராமலிங்கம், தேவி, மகாலிங்கம், சுந்தரவள்ளி ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு மொத்தம் ரூ.18.80 லட்சத்தை, சென்னையில் சக்திவேல், ஜெயக்குமார், சரவணன், அரிகுமார், அவரது மனைவி சரஸ்வதி ஆகியோரிடம் வழங்கினர்.
ஆனால், வேலை வாங்கித் தராமல் பணம் மோசடி செய்தனர். புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து ஜெயக்குமார், அரிகுமார் ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சக்திவேலை நேற்று கைது செய்து செஞ்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, விழுப்புரம் வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.