/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு
/
வானுார் அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு
வானுார் அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு
வானுார் அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு
ADDED : டிச 27, 2024 07:03 AM

வானுார்: வானுார் அரசு விதைப் பண்ணையில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தில், நெல் ஜெயராமனின் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மருத்துவ குணம் கொண்ட ஜீவன் சம்பா நெல் ரகத்தை அதிக அளவில் விவசாயிகள் மத்தியில் பிரபலப்படுத்த வானூர் வட்டாரத்தில் உள்ள அரசு விதைப் பண்ணையில் 1.5 ஏக்கர் பரப்பளவில் ஜீவன் சம்பா ரக நெல் விதைப்பண்ணை அமைக்கப்பட்டு பூக்கும் பருவத்தில் உள்ளது. இந்த விதைப்பண்ணையை வானூர் வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் ஆய்வு மேற் கொண்டார்.
இந்த மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய நெல்ரகம், வானுார் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கும், நடப்பு சம்பா பருவத்தில் வழங்கப்பட்டு 6 ஏக்கர் பரப்பில் நெல் விதைப்பண்ணை அமைக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்தும் விதைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு சம்பா பருவத்தில் அதிக அளவில் விவசாயிகளுக்கு இந்த ரகத்தை விநியோகம் செய்யப்படும் என்றார்.
இந்த ஆய்வின் போது திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி விஜய்கீதா, வேளாண்மை அலுவலர் சவுந்தர்ராஜன், உதவி வேளாண்மை அலுவலர் யமுனா ஆகியோர் உடன் இருந்தனர்.