/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்
/
உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்
ADDED : டிச 24, 2025 06:38 AM
விழுப்புரம்:தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் உதவி மின் பொறியாளர் நகரம் (தெற்கு) விழுப்புரம் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செயற்பொறியாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் திருச்சி நெடுஞ்சாலை எண் 1/29, ஏ.டி.எல்., காம்ப்ளக்சில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் உதவி மின் பொறியாளர் நகரம் (தெற்கு) அலுவலகம் செயல்பட்டது.
இந்த அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக விழுப்புரம், புதிய பஸ் நிலையம் எதிரில், தேர் பிள்ளையார் கோவில், கருணாநிதி தெரு, சீனிவாசா நகர், எண்.40ஏ, திருவள்ளுவர் சாலை என்ற முகவரியில் உள்ள தனியார் கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு, வரும் 29ம் தேதி முதல் செயல்பட உள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

