/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லுாரி மாணவிகளுக்கு தடகளப் போட்டி
/
கல்லுாரி மாணவிகளுக்கு தடகளப் போட்டி
ADDED : செப் 29, 2025 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம், தெய்வானை அம்மாள் மக ளிர் கல்லுாரியில், துறை களுக்கு இடையேயான தடகளப் போட்டி நடந்தது.
கல்லுாரி மாணவிகள் பேரவையின் முதுகலை செயலாளர் சுஜீதா வரவேற்றார். கல்லுாரியின் அனைத்து துறைகளை சேர்ந்த மாணவியர்கள் பங்கேற்றனர். 100, 200, 400 ஓட்டம் மற்றும் 800 மீ., தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடந்தது. 120 மாணவிகள் பங்கேற்றதில், 35 பேர் பல்வேறு பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்றனர். கல்லுாரி முதல்வர் கலைமதி வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவித்தார். மாணவிகள் பேரவையின் துணைத் தலைவர் காயத்ரி நன்றி கூறினார்.