/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் ஏ.டி.எம்., திறப்பு
/
விழுப்புரத்தில் ஏ.டி.எம்., திறப்பு
ADDED : டிச 13, 2024 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் புதிய ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா நடந்தது.
விழுப்புரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில், புதிதாக ஏ.டி.எம்., மையம் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து, நகராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் புதிய பஸ் நிலையத்தின் உள்ளே இந்தியா 1 ஏ.டி.எம்., மையம் அமைக்கப்பட்டு நேற்று, திறப்பு விழா நடந்தது.
முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி திறந்து வைத்தார். நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, வங்கி மண்டல மேலாளர் சந்திரன், முன்னாள் சேர்மன் ஜனகராஜ், தி.மு.க., நிர்வாகிகள் சக்கரை, இளங்கோ, பாலாஜி, குருசந்திரன், ரகுராம், கவுன்சிலர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.