sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 பீரோவில் நகைகளை வைக்காதீர்கள் ஏ.டி.எஸ்.பி., வேண்டுகோள்

/

 பீரோவில் நகைகளை வைக்காதீர்கள் ஏ.டி.எஸ்.பி., வேண்டுகோள்

 பீரோவில் நகைகளை வைக்காதீர்கள் ஏ.டி.எஸ்.பி., வேண்டுகோள்

 பீரோவில் நகைகளை வைக்காதீர்கள் ஏ.டி.எஸ்.பி., வேண்டுகோள்


ADDED : மார் 01, 2026 05:11 AM

Google News

ADDED : மார் 01, 2026 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: 'நகை, பணத்தை பீரோவில் வைப்பதால்தான் 90 சதவீதம் திருட்டுகள் எளிதாக நடக்கிறது என ஏ.டி.எஸ்.பி., தினகரன் தெரிவித்தார்.

விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது:

பிள்ளைகளின் முதல் ஆசிரியர் தாய்தான். தாய், தந்தை, ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை அளித்தால் வாழ்வில் உயரலாம்.

மாதா, பிதா, குரு, தெய்வத்தை மதிக்காதோர், காவல் துறையிடம் தான் குற்றவாளியாக வருவார்கள். சிறந்த நண்பர்களை தேர்வு செய்தால் மேன்மை பெறலாம். உங்கள் நட்பு வட்டார சூழலை சரியாக அமைக்க வேண்டும்.

பிளஸ் 2 வரை உள்ள மாணவர்கள், மொபைல் போன் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். மொபைல் போன் அதிகம் பயன்படுத்தாத மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கியுள்ளதாக ஆய்வு தகவல் கூறுகிறது.

சாலை விதிமுறைகளை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். 18 வயதுக்குட்பட்டோர் வாகனங்கள் ஓட்டுவது குற்றம். லைசன்ஸ் இன்றி வாகனங்களை இயக்கக் கூடாது. உரிய வயதை எட்டாத பிள்ளைகளை பைக் ஓட்டுவதற்கு பெற்றோர் அனுமதிப்பது தவறு.

அது ஆபத்தை உண்டாக்கும்.

இப்போது நிறைய திருட்டு சம்பங்கள் நடக்கிறது. நாம் விழிப்பின்றி உள்ளதால் விலை மதிப்பில்லாத பொருட்கள் கொள்ளை போகிறது. குறிப்பாக, பீரோக்களில் நகை, பணம் போன்றவற்றை அலட்சியமாக வைப்பதுதான், எளிதாக திருடு போவதற்கு காரணமாகிறது.

சென்னை பகுதியில் ஓராண்டில் நடந்த தொடர் திருட்டுகளில் 2500 சவரன் அளவில் களவு போனது. அனைத்து திருட்டும், வீட்டின் பீரோவில், சாவியை போட்டு திறந்து எளிதாக நடந்த சம்பவமாகும்.

பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை. பீரோவில் நகை, பணத்தை வைக்கக் கூடாது. சாவியையும் அலட்சியமாக அருகே வைக்காதீர்கள். தங்கம் விலை உயர்வதால், விழிப்போடு இருக்க வேண்டும்.

இவ்வாறு ஏ.டி.எஸ்.பி., தினகரன் பேசினார்.






      Dinamalar
      Follow us