/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பேக்கரி கடை உரிமையாளர் மீது தாக்குதல் இருவருக்கு வலை
/
பேக்கரி கடை உரிமையாளர் மீது தாக்குதல் இருவருக்கு வலை
பேக்கரி கடை உரிமையாளர் மீது தாக்குதல் இருவருக்கு வலை
பேக்கரி கடை உரிமையாளர் மீது தாக்குதல் இருவருக்கு வலை
ADDED : ஏப் 10, 2025 04:38 AM
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே பேக்கரி கடை உரிமையாளரை தாக்கி கத்தியால் வெட்ட முயன்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வழுதாவூரைச் சேர்ந்தவர் லட்சுமணன், 29; அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 6ம் தேதி கடைக்கு வந்த அதே பகுதி தியாகராஜன், 25; அப்பு, 24; இருவரும் தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளனர். தண்ணீர் பாட்டில் திறந்து இருப்பதாக கூறி பணம் தர மறுத்து லட்சுமணனிடம் வாக்குவாதம் செய்தனர்.
ஆத்திரம் அடைந்த தியாகராஜன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லட்சுமணனை வெட்ட முயன்றார்.
அப்பொழுது வழுதாவூர் ராஜேஷ், அய்யப்பன், ஆதித்யன் ஆகியோர் தியாகராஜன், அப்புவை தடுத்து தட்டிக்கேட்டனர். இருவரும் பேக்கரி உரிமையாளர் லட்சுமணன் மற்றும் தட்டிக்கேட்ட 3 பேரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய தியாகராஜன், அப்புவை தேடி வருகின்றனர்.