ADDED : பிப் 21, 2024 08:16 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம் : விழுப்புரம் அருகே நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த வயலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சரத்குமார், 31; அதே ஊரைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன்கள் கிருஷ்ணகுமார், மணிகண்டன். இவர்களுக்கு அருகருகே நிலம் உள்ளது. கடந்த 18ம் தேதி, தனது நிலத்துக்கு சரத்குமார் மாடு ஓட்டிச் சென்றார். அப்போது, கிருஷ்ணகுமார் நிலத்தில் இருந்த முருங்கை கன்று, சரத்குமார் கால் பட்டதால் உடைந்தது.
இதனால் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து, திட்டி, தாக்கியதில் சரத்குமார் படுகாயமடைந்தார்.
புகாரின் பேரில் காணை போலீசார் கிருஷ்ணகுமார், மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
