/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ள நிவாரணம் கேட்டு மறியல் செய்ய முயற்சி
/
வெள்ள நிவாரணம் கேட்டு மறியல் செய்ய முயற்சி
ADDED : டிச 18, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அருகே வெள்ள நிவாரணம் கேட்டு கிராம மக்கள் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.
திண்டிவனம் அடுத்த உள்ள ஓங்கூர் கிராம மக்கள் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி நேற்று காலை 11:00 மணியளவில் சாலை மறியல் செய்ய திரண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் தாசில்தார் சிவா, ஒலக்கூர் சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.