/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் தீக்குளிக்க முயற்சி: கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
/
பெண் தீக்குளிக்க முயற்சி: கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
பெண் தீக்குளிக்க முயற்சி: கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
பெண் தீக்குளிக்க முயற்சி: கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
ADDED : ஜன 30, 2024 06:29 AM
விழுப்புரம், : நகை, பணத்தை கடனாக வாங்கி ஏமாற்றிய தாய், தம்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சையத்அப்பாஸ் மனைவி சாதிக்கா, 45; இவர், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்தவர், திடீரென அலுவலக வாயில் முன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
உடன் அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது:
விழுப்புரம் வடக்கு தெருவில் வசித்து வருகிறேன். திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. 2 பிள்ளைகள் உள்ளனர். எனது தாய் வீடு திருச்சி, புள்ளம்பாடியில் உள்ளது.
எனது தம்பி அப்பாஸ், எனது தாயார், தம்பி மனைவி ஆகியோர், கடந்த 2011ம் ஆண்டில் விழுப்புரம் வந்து, எனது தம்பிக்கு கடன் ஏற்பட்டுள்ளதால், அதனை அடைக்க எனது நகையும், பணமும் கொடுத்து உதவும்படி கேட்டனர்.
ஊரில் உள்ள நிலத்தை பிளாட் போட்டு விற்ற பிறகு, கடனை திருப்பி தருவதாகவும் கூறினர்.
இதனால், எனது 20 சவரன் நகை மற்றும் மகள் திருமணத்துக்கு சேர்த்து வைத்திருந்த 2 லட்சம் ரூபாயும் கொடுத்தேன்.
ஆனால், அவர்கள் நகை, பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றினர். இதனால், ஏற்பட்ட குடும்பத் தகராறில், எனது கணவர் மற்றும் பிள்ளைகள் என்னை பிரிந்து வாழ்கின்றனர். எனது தாய், தம்பி ஆகியோரிடம் அந்த நகையை பல முறை கேட்டும் தரவில்லை.
விழுப்புரம் டவுன் போலீசில் புகார் அளித்தேன். அப்போது, நடந்த விசாரணையில் திருப்பித் தருவதாக கூறிச்சென்றவர்கள் இதுவரை தரவில்லை.
இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
அவரை சமாதானப்படுத்திய போலீசார், கலெக்டரிடம் மனு அளித்துச் செல்லும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.