ADDED : மார் 16, 2025 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லூர்; அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
வட்டாரச் செயலாளர் சுந்தரம் முன்னிலை வகித்தார். வட்டார பொருளாளர் ராஜாமணி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் 70 வயது நிரம்பியவருக்கு 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் வழங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டம் தொடர வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.