ADDED : ஆக 08, 2025 11:43 PM
அ நிறம் | அளவு
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம், தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ., சங்கத்தின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டத்தலைவர் வெற்றிவேந்தன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் மணி முன்னிலை வகித்தார். இதில்,
கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்தி அரசாணை வழங்குதல்; 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி முதிர்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை கிராம உதவியாளர்கள் பெயர் மாற்றம்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட கவுரவத் தலைவர் லோகேஷ் பேசினார். வட்ட பொருளாளர் பாலாஜி, அன்புவிழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை முகையூர் வட்டார வி.ஏ.ஓ சங்க நிர்வாகிகள் செய்தனர்.
