ADDED : செப் 05, 2025 03:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: முதல்வர் கோப்பை விளையாட்டுக்கான கூடைப்பந்து போட்டியில், ஆரோவில் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தமிழக முதல்வரின் கோப்பை விளையாட்டு போட்டி (2025-2026ம் ஆண்டு) விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் துவங்கியது. போட்டியை கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் துவக்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் கூடைபந்து போட்டியில் பங்கேற்று விளையாடின.
இதில் ஆரோவில் நியூ ஏரா மேல்நிலைப்பள்ளி (சி.பி.எஸ்.இ.,) அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணிக்கு, தமிழக அரசின் ரூ.36 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் ஏரா பள்ளியின் 5 வீரர்கள் மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டுக்கு தகுதி பெற்றனர்.