/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு நலவாரிய திட்டத்தின் கீழ் பெண் தொழிலாளிக்கு ஆட்டோ
/
அரசு நலவாரிய திட்டத்தின் கீழ் பெண் தொழிலாளிக்கு ஆட்டோ
அரசு நலவாரிய திட்டத்தின் கீழ் பெண் தொழிலாளிக்கு ஆட்டோ
அரசு நலவாரிய திட்டத்தின் கீழ் பெண் தொழிலாளிக்கு ஆட்டோ
ADDED : நவ 08, 2025 02:10 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தின் மூலம், பெண் தொழிலாளருக்கு மானியத்தில் ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், சுய தொழிலுக்காக வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தமிழ் நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொ ழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண்கள் மற்றும் திருநங்கையர்களுக்கு, மானியத்தில் வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் ஓட்டுநரான ராஜலட்சுமிக்கு, 3.40 லட்சம் ரூபா்ய் மதிப்பிலான ஆட்டோ ஒரு லட்சம் ரூபாய் மானியத்தில் நேற்று வழங்கப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் ஆகியோர் ஆட்டோவை வழங்கினர்.

