/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அவலுார்பேட்டை வாரசந்தை ஏலம் ஒத்திவைப்பு
/
அவலுார்பேட்டை வாரசந்தை ஏலம் ஒத்திவைப்பு
ADDED : டிச 27, 2024 06:56 AM

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் வார சந்தை ஏலம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
மேல்மலையனுார் தாலுகா அவலுார்பேட்டையில் வார சந்தைக்கான ஏலம் நேற்று ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், ஊராட்சித் தலைவர் செல்வம் தலைமையில் நடந்தது.
கிராம ஊராட்சி பி.டி.ஓ., சையத் முகமத் முன்னிலை வகித்தார்.
ஏலத்தில் பங்கேற்க 22 பேர் டெபாசிட் செலுத்திய நிலையில், யாரும் ஏலம் கேட்க முன்வராத நிலையில், மறு தேதி குறிப்பிடப்படாமல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. கடந்தாண்டு 32 லட்சத்து 1,000 ரூபாய்க்கு சந்தை ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் வேலு, கோவிந்தராஜூலு, வி.ஏ.ஓ., காளிதாஸ் , ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத், ஊராட்சி துணைத் தலைவர் சரோஜா ஐயப்பன்,ஊராட்சி செயலாளர் திருமலை, பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.