/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மொபைல் போனை தவிர்த்திடுங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் 'அட்வைஸ்'
/
மொபைல் போனை தவிர்த்திடுங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் 'அட்வைஸ்'
மொபைல் போனை தவிர்த்திடுங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் 'அட்வைஸ்'
மொபைல் போனை தவிர்த்திடுங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் 'அட்வைஸ்'
ADDED : பிப் 26, 2024 05:37 AM

விழுப்புரம்: 'மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த மொபைல் போன் பார்ப்பதை தவிர்த்திட வேண்டும்' என தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் முனுசாமி பேசினார்.
விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவிற்கு, தாளாளர் சோழன் தலைமை தாங்கினார். விழுப்புரம் ஸ்ரீமகாலட்சுமி குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜேஷ், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சுப்புராயன், மாவட்ட அரசு வழக்கறிஞர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கந்தசாமி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் தமிழக ஆசிரியர்கள் தேர்வு வாரிய இணை இயக்குனர் முனுசாமி பேசுகையில், 'மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த மொபைல் போன் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். நுாலகங்களுக்குச் சென்று புத்தகங்களைப் படித்து அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
தாய், தந்தை, ஆசிரியர்கள், வயதில் பெரியவர்களையும் மதித்து நடந்து கொள்ள வேண்டும். இதன் மூலம், எதிர்கால வாழ்வை சிறப்பாக உருவாக்கிக் கொள்ள முடியும்' என்றார்.
தொடர்ந்து புதுச்சேரி மணக்குள விநாயகர் கல்வி நிறுவனங்களின் குழுமத் தலைவர் மற்றும் தட்சஷீலா பல்கலைக் கழக வேந்தர் தனசேகரன் வாழ்த்தி பேசினார்.
பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பு, அ.தி.மு.க., கவுன்சிலர் கோதண்டராமன், தி.மு.க., நிர்வாகி ஏழுமலை, கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் அறிவுக்கரசு, சுரேஷ்பாபு, வழக்கறிஞர் மனோ, நர்சரி பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி, உதவி தலைமை ஆசிரியர் பிரித்திவிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

