/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சமூக சேவகர்களுக்கு விருது விண்ணப்பம் வரவேற்பு
/
சமூக சேவகர்களுக்கு விருது விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 26, 2025 12:35 AM
விழுப்புரம், : பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
சுதந்திர தின விழாவின்போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழக முதல்வரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
விருதுக்கு தமிழகத்தை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருக்க வேண்டும். தகுதியானவர்கள், தமிழக அரசு விருதுகள் இணையதளம் https://awards.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க ஜூன் 12ம் தேதி கடைசி நாள் ஆகும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும், கையேடாக தயார் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்ட 3 நகல்களை விழுப்புரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.