ADDED : மார் 07, 2024 01:02 AM

அ நிறம் | அளவு
திண்டிவனம் : திண்டிவனம் அருகே சாரம் வட்டார வளமையத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான விளையாட்டு விழா நடந்தது.
விழாவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருணா வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்(பொறுப்பு) சிவக்குமார், கல்வி அலுவலர்கள் சித்ரா, கிருஷ்ணன், ரோஷணை இந்து நகராட்சி பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விளையாட்டு போட்டியில் பங்கேற்ற 50 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமுல்லை நன்றி கூறினார்.
