ADDED : மார் 18, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்,: திண்டிவனம் தமிழ்ச்சங்கம் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு, மயிலம் கலை அறிவியல் கல்லுாரி தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
நகராட்சி கமிஷனர் தமிழ்ச்செல்வி வாழ்த்திப் பேசினார். விருது பெறுபவர்களை தமிழ்ச்சங்கத் தலைவர் துரை ராஜமாணிக்கம் பாராட்டி பேசினார். சங்க செயலாளர் ஏழுமலை வரவேற்றார்.
விழாவில், உழவர் காவலன் விருது கடவாம்பாக்கம் மணிக்கும், பசுமை நாயகன் விருது வி.ஏ.ஓ., காளிதாசுக்கும், மகளிர் ஒளி விளக்கு விருது எல்லம்மாளுக்கும் வழங்கப்பட்டது.
விழாவில் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், தனுஷ்கோடி, ஆண்டாள் நாச்சியார்சபை பாண்டியன், வழக்கறிஞர் பூபால், தலைமையாசிரிர் சுதர்சனன், மேரி வினோதினி உட்பட பலர் பங்கேற்றனர்.

