ADDED : செப் 06, 2026 09:11 PM

அ நிறம் | அளவு
செஞ்சி: அவ்வையார்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் ஆசிரியர் தின விழா நடந்தது. இதில் திண்டிவனம் அடுத்த அவ்வையார்குப்பம் அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியதாசுக்கு நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அரசு கூடுதல் செயலாளர் சந்தரமோகன், தமிழ்நாடு பாடநுால் கழகத் தலைவர் ஷஜீவனா மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
