/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு நடுநிலை பள்ளியில் 'தினமலர்- பட்டம்' வழங்கல்
/
அரசு நடுநிலை பள்ளியில் 'தினமலர்- பட்டம்' வழங்கல்
ADDED : அக் 11, 2024 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம், சாலாமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சரஸ்வதி கல்விக்குழுமம் சார்பில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் மணவாளன் தலைமை தாங்கி, 'தினமலர் - பட்டம்' இதழை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி, 'தினமலர் - பட்டம்' இதழை படிப்பதால், மாணவர்களின் அறிவு திறன், போட்டி தேர்வை சுலபமாக எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், சரஸ்வதி கல்விக்குழுமம் பொருளாளர் சிதம்பரநாதன் உட்பட ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.