மின்னணு ஒட்டுப்பதிவு இயந்திரம் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு
மின்னணு ஒட்டுப்பதிவு இயந்திரம் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு
ADDED : ஜன 28, 2026 06:15 AM

திண்டிவனம்: திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலின் போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுவதால், அதன் செயல்பாடுகள் குறித்து பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், நேற்று காலை திண்டிவனம் சப்கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் சப்கலெக்டர் ஆகாஷ், விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில் சப்கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொது மக்கள், இளம் வாக்காளர்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மூலம் எப்படி ஓட்டு போடுவது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இதில் சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜன், தாசில்தார் யுவராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
