/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கலைக்கல்லுாரியில் விழிப்புணர்வு
/
அரசு கலைக்கல்லுாரியில் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 04, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருவார பயிற்சி திட்டம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் தலைமை தாங்கினார். விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லுாரி தாவரவியல் துறை இணைப் பேராசிரியர் சிவராமன், கலந்துகொண்டு, போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், போதைப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பேசினார்.
அப்போது, பேராசிரியர்கள் பாபு, சுவாமிநாதன், சுமதி, ரங்கநாதன், மணவாளன், சின்னதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.