/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாடிபள்ளம் ஊராட்சியில் விழிப்புணர்வு முகாம்
/
பாடிபள்ளம் ஊராட்சியில் விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜன 19, 2025 06:42 AM
செஞ்சி: செஞ்சி ஒன்றியம் பாடிபள்ளம் ஊராட்சியில் துாய்மை பாரதம் இயக்கம் சார்பில் நமது கிராமம் நமது சுத்தம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.
இதை முன்னிட்டு கிராம சுத்தத்தை வலியுறுத்தி பெண்களுக்கு கோலபோட்டி, நாடகம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கிராமத்தின் சுத்தம் குறித்து கிராம மக்களுக்கு விளக்கி பேசினர்.
நிகழ்ச்சிக்கு பி.டி.ஓ., நடராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் தாட்சாயணிகார்த்தி கேயன் முன்னிலை வகித்தார். ஏ.பி.டி.ஓ., குமாரி, தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் குமரேசன், வி.ஏ.ஓ., முத்து, ஊராட்சி உறுப்பினர்கள் கலையரசி, மஞ்சுளா மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி செயலாளர் சஞ்சய்காந்தி நன்றி கூறினார்.

