ADDED : ஜன 30, 2026 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தி தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியை குணசீலா முன்னிலை வகித்தார். ஆசிரியை ஹேமலதா வரவேற்றார்.
சமூக நலத்துறை புலன் கருத்தாளர் புவனேஸ்வரி கலந்துகொண்டு மாணவிகளுக்கு பெண் குழந்தைகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும், இடர்பாடான காலங்களில் எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்து பேசினார்.
ஆசிரியைகள்பார்கவி, சவுந்தர்யா, சுந்தரமூர்த்தி, ஜெயக்குமாரி, ஆரோக்கிய மேரி, ஆசைவேல்குமரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

