ADDED : மார் 10, 2026 03:55 AM
அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ரயில்வே குற்றங்கள் தண்டனைகள் குறித்து பொதுமக்களுக்கு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில் குமார் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷன் தலைமையில் போலீசார் நேற்று திண்டிவனம் அடுத்த நெடி, மோழியனுார் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பொதுமக்களிடம், ரயில்வே தண்டவாளங்களில் கற்கள், இரும்பு பொருட்கள் வைப்பதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும், ரயில்கள் செல்லும்போது அதன் மீது கற்களை எறிவது குறித்தும், இது போன்ற செயல்களால் ரயில்வே துறையினரால் விதிக்கப்படும் சிறை தண்டனை குறித்து விளக்கம் அளித்தனர்.
