ADDED : மே 13, 2025 12:54 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில், கலைஞர் கனவு இல்ல வீடுகட்டும் திட்டம் குறித்து பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது.
பனையபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், பி.டி.ஓ., நாராயணன், பொறியாளர் குமரன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., சையதுமுகமது வரவேற்றார்.
வீடு கட்ட ஆணை பெற்ற பயனாளிகள் 15 நாட்களுக்குள் வீடு கட்டும் பணியை துவக்க வேண்டும். தவறினால் வீடு கட்டும் ஆணை ரத்து செய்யப்படும். 360 சதுர அடி அளவில் வீடு கட்ட வேண்டும். கட்டுமான பொருட்கள், கம்பிகள் அலுவலகத்தில் வழங்கப்படும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
அலுவலக மேலாளர் டேவிட் குணசீலன், ஒன்றிய பொறியாளர் செந்தில்வடிவு, பணி மேற்பார்வையாளர்கள் விஜயராமன், செந்தில்குமார், செல்வராணி, ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.