/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
/
பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 04, 2025 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நடந்தது.
பேரூராட்சி சார்பில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு செயல்விளக்கத்திற்கு செயல் அலுவலர் ேஷக் லத்தீப் தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார். மாணவிகளுக்கு, 'துாய்மையாக இருங்கள், நோயின்றி இருங்கள்' என்ற தலைப்பில் நம் வாழ்வின் நடைமுறையில் நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய செயல்பாடுகளில் மிக முக்கியமானதாக கைகழுவும் முறைகள் குறித்து துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம் செயல் விளக்கமளித்தார்.