ADDED : செப் 23, 2024 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் பள்ளியை அடைந்தது.
அங்கு நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியை கீதா, செயல் அலுவலர் ேஷக் லத்தீப், இளநிலை அலுவலர் ராஜேஷ், துப்புரவு ஆய்வாளர் முத்துக்குமரன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், துப்புரவு பணியாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.