ADDED : பிப் 01, 2024 11:39 PM
அ நிறம் | அளவு
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கண்டாச்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஊர்வலத்திற்கு, வட்டார மருத்துவர் சுகுமாறன் தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் கதிரவன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் காளிதாஸ் வரவேற்றார்.
தொடர்ந்து தொழுநோய் விழிப்புணர்வு கோஷங்களுடன் பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
பின், பள்ளி மாணவர்களிடையே சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ், செவிலியர் ராணி ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ஜான்சன் செய்திருந்தார்.
