ADDED : பிப் 05, 2024 07:18 AM

அ நிறம் | அளவு
மயிலும் : மயிலம் அடுத்த ரெட்டணையில் ரிவர்ஸ் அரிமா சங்கம் மற்றும் பெரியதச்சூர் காவல் நிலையம் சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு, மண்டல தலைவர் சுரேஷ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், மாணவ, மாணவியர்கள் போதைப் பொருள் தடுப்பு குறித்து கோஷங்களை எழுப்பியபடி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர்.
நிகழ்ச்சியில், அரசு வழக்கறிஞர் செந்தில்குமார், பெரியதச்சூர் சப் இன்ஸ்பெக்டர், அரிமா சங்கத் தலைவர் குமரகுரு, செயலாளர் குருமூர்த்தி மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
