ADDED : ஜன 10, 2026 06:56 AM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அன்னியூர் அரசு கல்லுாரியில், போதைப்பொருள் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் தலைமை தாங்கினார். கஞ்சனுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் விஸ்வநாதன், ரவிச்சந்திரன், ஏட்டு பரிமளா சிறப்புரையாற்றினர். பெற்றோர் ஆசிரியர் அமைப்பு தலைவர் அரியபுத்திரன், பேராசிரியர் சுவாமிநாதன் நோக்கவுரையாற்றினர்.
பேராசிரியர்கள், மாணவர்கள் சைக்கிளிலில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆசிரியர் கோவிந்தராஜ், பேராசிரியர்கள் ஜெயந்தி, கிரிஜா, முகமது உசேன், சதீஷ்குமார் மற்றும் அலுவலக உதவியாளர்கள் ரேவதி, கிரிஸ்வர், ராசு, விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
நாட்டு நல பணி திட்ட அலுவலர் அருணாச்சலம் நன்றி கூறினார்.
