ADDED : ஜன 26, 2026 04:05 AM

வானுார்: வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மொரட்டாண்டி டோல்கேட் மற்றும் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சந்திப்பில் துவங்கிய ஊர்வலத்தை ஆரோவில் இன்ஸ்பெக்டர் திருமால் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் வில்லலியம் தலைமை தாங்கினார்.
ஊர்வலத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த பைக் ஓட்டுநர்களுக்கும், காரில் சீட் பெல்ட் அணிந்து வந்த ஓட்டுநர்களுக்கும் பேனா வழங்கப்பட்டது.
ஊர்வலத்தின் போது, மாணவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், விழிப்புணர்வு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஏற்பாடுகளை சாலை பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் தேவநாதன், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் குணசேகரி செய்திருந்தனர்.

