ADDED : பிப் 16, 2026 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில், புதை படிவ எரி பொருட்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
விழுப்புரம் சிக்னல் சந்திப்பில் தொடங்கிய ஊர்வலத்தில் பாரத் பெட்ரோலியம் கிளை மேலாளர் அருண் சுப்ரமணியன் தலைமையில், ஊழியகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயுவைப் பாதுகாப்போம், பசுமைக்கு மாறுவோம் என கோஷமிட்டபடி, விழுப்புரம் சிக்னலில் இருந்து புறப்பட்டு, கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.

