ADDED : மார் 24, 2026 04:15 PM

அ நிறம் | அளவு
திண்டிவனம்: வரும் சட்டசபை தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திண்டிவனம் தொகுதி சார்பில், தாலுகா அலுவலகம் அருகிலிருந்து நேற்று காலை விழிப்புணர்வு துவங்கிய ஊர்வலத்தை சப் கலெக்டர் ஆகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ், தாசில்தார் நீலவேணி, நகராட்சி கமிஷனர் பானுமதி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று, நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
