ADDED : ஏப் 12, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
மயிலம்: மயிலம் ஊராட்சியில் தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மயிலம் தமிழ்க் கல்லுாரி சார்பில் வாக்காளர்கள் நுாறு சதவீதம் ஓட்டுப்போட வேண்டும் என்பதை வலியுறுத்தி நடந்த ஊர்வலத்திற்கு, மயிலம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஏழுமலை தலைமை தாங்கினார். தமிழ்க் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து பேசினார்.
கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன், உதவி பேராசிரியர் சிவசுப்ரமணியம் மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
