/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
/
தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
ADDED : மே 03, 2025 05:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தமிழக அரசு அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்பலகை தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, திண்டிவனம் அனைத்து வியாபாரிகளின் சங்கங்களின் தலைவர் வெங்கடேசன் தலைமையில், திண்டிவனத்தில் அனைத்து கடைகளுக்கும் நிர்வாகிகள் நேரில் சென்று, தமிழில் பெயர்பலகை வைப்பது குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இதில், காய்கறி வியாபாரிகள் சங்கம் ஏழுமலை, பாத்திரக்கடை சங்க தலைவர் பால்பாண்டியன் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.