ADDED : பிப் 28, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு சார்பில் மாணவர்களுக்கு சிறுகுறுநடுத்தர தொழில்கள் குறித்து நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் நாராயணன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் கோபிநாத் வரவேற்றார்.
விழுப்புரம் மாவட்ட தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன மாவட்ட திட்ட மேலாளர் சீனுவாசன், அரசாங்கத்தின் உதவி மற்றும் மானியம் குறித்து பேசினார்.
விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்து நுாற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
