ADDED : மார் 26, 2026 08:28 PM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கொல்லியங்குணம் பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பவ்டா தொண்டு நிறுவனம், வாட்டர் அமைப்பு சார்பில் நீர் மற்றும் பாலின சமத்துவம் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை திட்ட மேலாளர் விவேகானந்தன், பவ்டா நிதி நிறுவன பொது மேலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சேகர், துணை முதல்வர்கள் கார்த்திக் மற்றும் தாமசியன், கல்வி இயக்குநர் பழனி.
விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம், பவ்டா நிதி நிறுவன துணை பொது மேலாளர் கவுஸ், மூத்த உதவி பொது மேலாளர் ஆரோக்கியசாமி, குடும்ப ஆலோசகர் பாத்திமாபீ ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில், நீர் பற்றாக்குறை, பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வினாடி, வினா போட்டியில் மாணவிகள் நந்தினி, சுதாகவி, ஆதிபாக்யம் ஆகியோரும், விவாதப் போட்டியில் மாணவிகள் சத்யா, திலகவதி, எழிலரசி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
